Vegetable Pulao – Simple Tasty Healthy recipe

வாணலியில் நெய்யை சூடாக்கி அதில் பட்டை, தக்கோலம், ஏலக்காய், சோம்பு, கிராம்பு, மிளகு, பிரியாணி இலை சேர்த்து சிறு விநாடிகள் வதக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் நறுக்கிய பச்சை மிளகாய், குடைமிளகாய், கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். பிறகு அதில் ஊற வைத்த சீரக சம்பா அரிசி அல்லது பாஸ்மதி அரிசி 2 கப் சேர்த்து சமமாக கலந்து விடவும். பிறகு அதில் ஒரு கப் தேங்காய் பால், 3 கப் தண்ணீர் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறு வினாடி கலந்து விட்டு, மூடி வைக்கவும். 20 நிமிடங்கள் கழித்து, அடுப்பை அணைக்கவும். மல்லி இலைகள் சேர்த்து மென்மையாக கலந்து விடவும். எளியமுறையில் வெஜிடபிள் புலாவ் தயார் ஆகி விட்டது. mushroom அல்லது உருளைக்கிழங்கு குழம்புடன் சேர்த்து பரிமாறவும். வீடியோவை பார்த்து செய்து பாருங்கள். பிடித்திருந்தால் வீடியோவை உங்க நண்பர்கள் உறவினர்களுக்கு பரிந்துரையுங்கள். மேலும் பல எளிமையான சமையல் வீடியோக்கள் காண இந்த சேனலை subscribe செய்யவும். நன்றி.