Healthy Recipes Series Episode 1 பெசரட்டு உப்மா | Pesarattu Upma In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

#பெசரட்டுஉப்மா#PesarattuUpma#GreenGramRecipes#PesarattuRecipes #BreakfastRecipes#UpmaRecipes#PesarattuDosaRecipes#HomeCookingTamil #HealthyRecipes

தேவையான பொருட்கள்

பெசரட்டு மாவு அரைக்க

பச்சை பயறு – 1 கப்
புழுங்கல் அரிசி – 1/4 கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
உப்பு – 1 தேக்கரண்டி

ரவா உப்மா செய்ய

வறுத்த ரவை – 125 மில்லி கப்
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
நெய் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
கருவேப்பில்லை
தண்ணீர் – 250 மில்லி
உப்பு – 1/2 தேக்கரண்டி

செய்முறை
1. பெசரெட் மாவு செய்ய ஒரு பாத்திரத்தில் பச்சைபயிறு மற்றும் புழுங்கல் அரிசி போட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
2. 4 மணி நேரம் கழித்து, ஊறிய பச்சைபயிறையும் அரிசியையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு மற்றும் ஊற வைத்த தண்ணீர் சிறிது சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3. ரவா உப்புமா செய்ய ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி அதில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு சேர்த்து, கடுகு பொரிந்தவுடன் இதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. வெங்காயம் பாதி வதங்கியதும் இதில் கூறப்பட்டுள்ள அளவு தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
5. தண்ணீர் கொதித்தவுடன் வறுத்த ரவையை இதனுடன் சேர்த்து கிளறவும்.
6. ரவை வெந்தவுடன் அதில் சிறிது நெய் சேர்த்து கிளறி இறக்கவும். உப்மா தயார்.
7. பெசரட்டு மாவை தண்ணீர் ஊற்றி விருப்பமான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
8. அடுத்து ஒரு தவாவை சூடு செய்து பெசரட் மாவை ஊற்றி தோசை போல் வார்க்கவும்.
9. நெய் ஊற்றி தோசையை சுடவும்.
10. தோசை இருபுறமும் வெந்தவுடன் செய்த மாவை நடுவில் வைத்து தோசையை பாதியாக மூடவும்.
11. விருப்பப்பட்டால் சிறிது நறுக்கிய வெங்காயத்தை தூவி கொள்ளலாம்.
12. பெசரட் உப்புமா தயார்.

You can buy our book and classes on

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :