Healthy Recipes Series ( Episode 2 ) தினை பிசிபெல்லா பாத் | Millet Bisi Bele Bath In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

#HealthyRecipes #தினைRecipes#PathRecipes#MilletRecipes
#தினைபிசிபெல்லாபாத்#HomeCookingTamil#MilletBisiBellaBath

தேவையான பொருட்கள்

சாம்பார் தூள் செய்ய
நெய்
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
முழு தனியா – 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 6
துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி

சாம்பார் செய்ய
நெய் – 2 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 1 கப்
கேரட் – 1 நறுக்கியது
பீன்ஸ் – 5 நறுக்கியது
பச்சை பட்டாணி – 1/2 கப்
உருளைக்கிழங்கு – 1 நறுக்கியது
முருங்கைக்காய் – 1 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
புளிக்கரைசல் – 1/2 கப்
அரைத்த சாம்பார் மசாலா – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவைக்கு ஏற்ப
கறிவேப்பில்லை
தண்ணீர்

தினையை வேகவைக்க
தினை – 3/4 கப்
துவரம் பருப்பு – 1/3 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
தண்ணீர்

செய்முறை
1. தினையை கழுவி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.
2. அடுத்து சாம்பார் மசாலா தூள் செய்ய, ஒரு கடாயில் நெய் ஊற்றி, அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முழு தனியா, சீரகம், வெந்தயம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
3. மசாலாக்கள் நிறம் மாறியவுடன், இதில் துருவிய தேங்காய் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் வறுத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆறியபின் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
4. அடுத்து சாம்பார் செய்ய, ஒரு கடாயில் நெய் ஊற்றி, இதில் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு வதக்கவும்.
5. வெங்காயம் சிறிது வதங்கியவுடன், இதில் கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு மற்றும் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும்.
6. காய்கறிகளுடன் சிறிது உப்பு மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்கவும்.
7. அடுத்து இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக வைக்கவும்.
8. காய்கறிகள் வெந்தவுடன், புளிக்கரைசல் மற்றும் அரைத்த சாம்பார் மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
9. சேர்த்த மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு சாம்பாரை இறக்கவும்.
10. அடுத்து ஒரு பிரஷர் குக்கரில் ஊறிய தினை, துவரம் பருப்பு, மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும்.
11. செய்த சாம்பாரை மீண்டும் சூடு செய்து, இதனுடன் வேகவைத்த தினை மற்றும் பருப்பு கலவையை சேர்த்து நன்கு கிளறவும்.
12. ஆரோக்கியமான தினை பிசிபேளாபாத் தயார் 

You can buy our book and classes on

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :