உலகம் முழுவதும் மக்களால் அதிகம் விரும்பி உண்ணும் உணவுகளில் சாண்ட்விச் முதலிடத்தில் உள்ளது. இரண்டு பிரெட் துண்டுகளுக்கிடையே இறைச்சியை வைத்து உண்ணும் உணவான சாண்ட்விச் முதன்முதலில் உருவாக்கப்பட்டது இங்கிலாந்தில் சாண்ட்விச்சில் தான். சாண்ட்விச் நகரத்தில் உருவாக்கப்பட்டதால் அந்தப்பெயரே உணவிற்கும் வைக்கப்பட்டது.
அமெரிக்கர்களுக்கும் சாண்ட்விச்சிற்கும் ஏகப்பட்ட பாசம் உண்டு. ஏனெனில் அதற்கென ஒரு நாளையே ஒதுக்கி கொண்டாடுகிறார்கள் அமெரிக்கர்கள். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 3 – ஆம் தேதி சாண்ட்விச் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.
உலகத்தின் மிகப்பெரிய சாண்ட்விச் தயாரித்ததும் அவர்கள் தான். மிச்சிகன் மாநிலத்தில் 2005 – ஆம் ஆண்டு 2467.5 கிலோ அளவுள்ள சாண்ட்விச் தயாரிக்கப்பட்டது. 12 அடி அகலம். 12 அடி நீளம் !!!
நீங்கள் தான் தயாரிப்பீர்களா? நாங்கள் செய்ய மாட்டோமா? எனப்பொங்கி விட்டார்கள் லெபனான் நாட்டுக்காரர்கள். உடனே உலகத்தின் நீளமான சாண்ட்விச்சை தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். தயாரானது 2411 அடி சாண்ட்விச். இன்றுவரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை.
நண்பர்களே!
நான் SriLankan தமிழ் பெண் எனது புதிய முயற்சியாக Yummy Recipes
என்னும் YouTube channel
தொடங்கியுள்ளேன். . உங்களின் ஆதரவை எதிர்பார்க்கின்றேன் எனது YouTube channel subscribe ,like பண்ணுங்கள்
happy Christmas to you my friends
