Healthy Recipes Series Episode 5 | தினை பொங்கல் | Millet Pongal In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

#MilletRecipes #HealthyBreakfast #Millet Pongal #PongalRecipes #தினைபொங்கல் #HomeCookingTamil

தேவையான பொருட்கள்

தினை பொங்கல் செய்ய
தினை – 1/2 கப்
பாசிப்பருப்பு – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்
நெய் – 1 1/2 மேசைக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு பொடியாக நறுக்கியது
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
முழு மிளகு – 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
கறிவேப்பில்லை

தேங்காய் சட்னி செய்ய

துருவிய தேங்காய் – 1/2 கப்
உடைத்த கடலை – 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் – 1 நறுக்கியது
உப்பு

செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் தினை மற்றும் பாசிப்பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. பிரஷர் குக்கரில் ஊற வைத்த தினை மற்றும் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சத்தூள் போட்டு குக்கரை மூடி மிதமான சூட்டில் 3 விசில் வரை வேக வைக்கவும்.
3. தேங்காய்ச் சட்னி செய்ய, ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
4. இதன்மேல் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். தேங்காய் சட்னி தயார்.
5. ஒரு கடாயில் நெய் ஊற்றி, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், முந்திரிப்பருப்பு, முழு மிளகு மற்றும்  கருவேப்பிலை சேர்த்து வறுத்து, வேகவைத்த தினை பருப்பு கலவையில் சேர்த்து கிளறவும்.
6. பொங்கல் கெட்டியாக இருந்தால் சிறிது சூடான தண்ணீர் அல்லது சூடான பால் சேர்த்து கிளறிக் கொள்ளவும்.
7. அருமையான திணை பொங்கல் தயார்.

You can buy our book and classes on

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :