Healthy Recipe Series Ep 8 | Protein rich | செட்டிநாடு முட்டை குழம்பு | Chettinad Egg Curry In Tamil

We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase

#EggRecipes#Chettinad#EggMasala#HomeCookingTamil#NonVegRecipes
#EggCurry#முட்டைகுழம்பு

தேவையான பொருட்கள்

மசாலா விழுது அரைக்க

எண்ணெய் – 1 தேக்கரண்டி
பட்டை – 1 துண்டு (Buy:
அன்னாசி பூ – 1 (Buy:
ஏலக்காய் – 2 (Buy:
கிராம்பு – 4 (Buy:
சீரகம் – 1 தேக்கரண்டி (Buy:
சோம்பு – 1 தேக்கரண்டி (Buy:
முழு மிளகு – 1 தேக்கரண்டி (Buy:
முழு தனியா – 2 தேக்கரண்டி (Buy:
காய்ந்த மிளகாய் – 5 (Buy:
பூண்டு – 6 பற்கள்
இஞ்சி – 1 துண்டு
துருவிய தேங்காய் – 1/4 கப்
தண்ணீர்

முட்டையை வறுக்க

எண்ணெய் -1 தேக்கரண்டி (Buy:
மஞ்சள் தூள் -1/4 தேக்கரண்டி (Buy:
உப்பு – 1/2 தேக்கரண்டி (Buy:
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
முட்டை – 5 வேகவைத்து

செட்டிநாடு முட்டை குழம்பு செய்ய

வறுத்த முட்டை – 5
அரைத்த மசாலா விழுது
நல்லெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
பெரிய வெங்காயம் – 3 பொடியாக நறுக்கியது
கறிவேப்பில்லை
தக்காளி – 3 பொடியாக நறுக்கியது
கல்லுப்பு – 1 1/2 தேக்கரண்டி
தண்ணீர் – 2 கப்

செய்முறை
1. மசாலா அரைக்க, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் பட்டை, அன்னாசிப்பூ, சீரகம், சோம்பு, கிராம்பு, முழு மிளகு, ஏலக்காய், முழு தனியா மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும்.
2. அடுத்து இதில் பூண்டு, இஞ்சி, துருவிய தேங்காய் சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வரத்து, வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
3. மசாலா ஆறியபின் மிக்ஸியில் போட்டு முதலில் நீரில்லாமல் அரைக்கவும்.
4. அடுத்து சிறிதளவு நீர் ஊற்றி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து குறைந்த தீயில் கலக்கவும்.
6. வேகவைத்த முட்டையில் சிறு கீறல்கள் போட்டு, கடாயில் போட்டு, மசாலாவில் பிரட்டவும்.
7. அடுத்து ஒரு அகல பாத்திரத்தில், நல்லெண்ணெய் ஊற்றி, இதில் வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
8. வெங்காயம் பொன்னிறமானதும் இதில் தக்காளியை சேர்த்து கிளறவும்.
9. தக்காளி வதங்கிய பின், கல்லுப்பு மற்றும் அரைத்த மசாலா விழுது சேர்த்து 5 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வதக்கவும்.
10. அடுத்து இதில் தண்ணீர் ஊற்றி, கலந்து, 5 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
11. பச்சை வாசனை போன பின், இதில் வறுத்த முட்டைகளை சேர்த்து, கடாயை மூடி, மேலும் 5 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
12. அருமையான செட்டிநாடு முட்டை குழம்பு தயார்.

You can buy our book and classes on

HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE:
FACEBOOK –
YOUTUBE:
INSTAGRAM –
A Ventuno Production :