ஹாய் பிரண்ட்ஸ் இன்னைக்கு நம்ம வீடியோல ஈஸியான ஹெல்த்தியான அவல் லட்டு ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் இந்த ரெசிபி வந்து நாங்க சிவப்பு அவல் வச்சு செஞ்சிருக்கோம் அது வந்து ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு சிவப்பு அவுலை சேர்த்துட்டு நல்லா ஒரு ரெண்டு நிமிஷம் வறுத்து எடுத்துக்கலாம் வறுத்து எடுத்துட்டு நல்லா ஆற வச்சுக்கணும் அதே கடாயில தேங்காய் துருவல் வந்து ஒரு அரை கப் சேர்த்துக்கலாம் சேர்த்துட்டு இந்த ஈரப்பதம் எல்லாம் போற மாதிரி வறுத்துக்கணும் அப்படியே நீங்க தேங்காய் சேர்த்தீங்க அப்படின்னா உடனே சாப்பிடுற மாதிரி இருக்கும் வச்சு சாப்பிட முடியாது அதனால வறுத்துட்டோம் அப்படின்னா நம்ம ஒரு நாள் வச்சு சாப்பிடலாம் அதுக்கப்புறம் இதை மிக்ஸி ஜார்ல சேர்த்துட்டு ஒரு கப் அவலுக்கு முக்கால் கப் நாட்டுச்சக்கரையும் அரை ஸ்பூன் வந்து ஏலக்காய் தூளும் சேர்த்து நல்லா அரைச்சு எடுத்துக்கலாம் அரைச்சு எடுத்துட்டு தேங்காயோட சேர்த்து மிக்ஸ் பண்ணிக்கலாம் இதுக்கு வந்து நம்ம இப்ப முந்திரி திராட்சை நெய்யில வறுத்து சேர்த்துக்கணும் ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய்யோட முந்திரியும் திராட்சையும் வறுத்துட்டு உள்ள சேர்த்துக்கோங்க நாங்க திராட்சை ஆட் பண்ணல உங்களுக்கு பிடிக்கும்னா சேர்த்துக்கோங்க இந்த நெய்யோட இதுலயே நம்ம வந்து உருண்டையா உருட்டிரலாம் பத்தலைனாலும் நீங்க கொஞ்சம் நெய் சேர்த்துக்கோங்க இந்த மாதிரி உருட்டி எடுத்தோம்னா சூப்பரான அவல் லட்டு